Tuesday, July 08, 2008

64. பள்ளி மாணவிகளுக்கு உதவும் தொழிலாளி....

கழிவறை சுத்தம் செய்து பெற்றோரை இழந்த மாணவிகளுக்கு உதவும் தொழிலாளிகோவை: குடும்பத்தைக் காப்பார்ற வெல்டிங் வேலை; பெற்றோரை இழந்த பள்ளிமாணவிகளுக்கு புத்தகம் வாங்கிக் கொடுக்க கழிவறை சுத்தம் செய்யும் வேலை என், இரண்டி வேலைகளை செய்து குடும்பத்துக்கும், பள்ளி மாணவிகளுக்கும் உதவி வருகிறார்,கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த திரு லோகநாதன். இவரது மனைவி சசிகலாதேவி,குடும்பத் தலைவி, மகன் சிவகுரு பி.காம் படிக்கிறார். மகள் அன்னபூரணி, நான்காம்வகுப்பு படிக்கிறார்,
காலையில் இருந்து மதியம் 1 மணி வரை வெல்டிங், கேஸ் கட்டிங் வேலைகளைச்செய்யும் லோகநாதன், 1:15 மணிக்கு மதிய உணவை முடித்து விடுகிறார். மீதியுள்ள45 நிமிடங்களில் அருகிலுள்ள வீடுகள், நிறுவனங்களில் உள்ள கழிவறைகளைச் சுத்தம் செய்கிறார். மீண்டும் வெல்டிங் வேலைக்கு மதியம் 2 மணிக்குத் திரும்பிமாலை 6 மணிக்கு வேலையை முடிக்கிறார். பிறகு மாலை 6 மணிக்குப் பல வீடுகளுக்குச்சென்று கழிவறைகளை சுத்தம் செய்கிறார்.
வெல்டிங் வேலையில் மாதம் ஆறாயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறாது. இந்தச்சம்பளத்தை குடும்பத்துக்கு ஒதுக்கி விடுகிறார். கழிவறை சுத்தம் செய்யும் வேலையில்கிடைக்கும் வருமானத்தைத் தனியே சேமிக்கிறார். சில மாதங்களாகச் சேகரித்துவைத்த ஐந்தாயிரம் ரூபாயை, கோவை காந்தி மாநகரில் உள்ள சமூக நலத்துறைக்கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சத்யா அம்மையார் நினைவு அரசு காப்பகத்துக்குவழங்கினார். இந்தப் பணத்தை, காப்பகத்தில் தங்கியுள்ள 10 வது பிளஸ் 1, பிளஸ் 2படிக்கும் மாணவிகளுக்கு, "கைடு" வாங்க பயன்படுத்துமாறு கூறினார்..

இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட காப்பகக் கண்காணிப்பாளர் கிரிஜா,காப்பகத்தில் உள்ள 47 பள்ளி மாணவிகளுக்கு வழிகாட்டி கையேடு வழங்கினார்.கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில்நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் லோகநாதனை கலெக்டர் பழனிக்குமார் பாராட்டினார்.
லோகநாதன் கூறுகையில் "உழைத்துக் கிடைக்கும் வருமானத்தில், பெற்றோரை இழந்தகுழந்தைகளின் படிப்புக்கு உதவுவதில் இருக்கும் மன திருப்தி வேறு எதிலும் கிடைப்பதில்லை என்றார்.
அன்பு லோகநாதன் அவர்களே.. உங்கள் சேவைக்குத் தலை வணங்குகிறேன்..
லோகநாதன் அவர்களின் சேவையை பெருமையுடன் முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்ட தினமலருக்கு நன்றி..
.திரு லோகநாதன் அவர்களின் முகவரி.
திரு லோகநாதன்
எஸ். எம் இஞ்ஜினீயரிங்
697 ராமநாதபுரம்
கோவை 45
போன்: 99526-21150

5 comments:

யாத்திரீகன் said...

நம் செலவு போக மீதம் இருக்கும் பணத்தில் சிறிது கொடுத்து உதவுவது என்பதொன்றும் பெரிய விஷயமில்லை.. உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படும் இவர்களை போன்றோரே மிகப்பெரியோர் .. இந்த செய்தியை கவனத்திற்கு கொண்டு வந்த நண்பரே நன்றி ..

rapp said...

இப்படிப்பட்டவர்கள் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்கிறது. இந்த மனது பெற்றிடவும் ஒரு தனி புண்ணியம் செய்திருக்க வேண்டும். இதனை வெளிச்சம் போட்டு காட்டியமைக்கு நன்றி

மோகன் கந்தசாமி said...

அடடா! நெஞ்ச தொட்டுட்டாரு சார் இவர், சல்யூட்!

Vijay said...

இரண்டு தாமிர காசுக்களை நன்கொடையாக இட்ட பெண்ணை காட்டி ஏசு சொன்னாராம். "இவளே உங்கள் எல்லாரையும் விட அதிக நன்கொடை அளித்தாள் என்று"..அது தான் நியாபகத்துக்கு வருது. இருந்து கொடுக்கற நம்மை காட்டிலும், கொடுக்கறத்துக்காகவே இருக்காங்களே, இவங்கதாங்க நிஜ வள்ளல்கள்.

ராப் சொன்னமாதிரி மழை இவங்களாலதான் பெய்யிது.

Seemachu said...

திரு லோகநாதன் அவர்களின் முகவரியும் செல் பேசி எண்ணும் சேர்க்கப்பட்டுள்ளது..