Tuesday, July 15, 2008

66. இவர் செய்வது சரியா? நீங்களே சொல்லுங்கள்!!

அண்மையில் சில மணி நேரங்கள் சும்மாக் கழிக்க வேண்டிய பொழுதினில் ஒரு நண்பருடன் இருந்த போது நடந்த ஒரு விவாதம். யார் சொல்வது சரியென்றுநீங்களே சொல்லுங்களேன்..


நண்பரின் தகப்பனாருக்கு (ரிட்டயர் ஆகிவிட்ட ஒரு வக்கீல) இப்பொழுது ஒரு 60 வயதிருக்கும். இறைவன் அருளில் நல்லஆரோக்கியமாகவே இருக்கிறார். குழந்தைகள் மூவரையும (நண்பர் உட்பட) நல்ல முறையில்படிக்க வைத்து மிக அருமையான விதத்தில் செட்டில் செய்து விட்டார்.


காசு பணத்திற்குக் குறைவில்லை... ஆண்டவன் அருளில் குறைகளுமில்லை நிறைவானவாழ்க்கை.. சுக வாசியாக TV பார்த்துக் கொண்டு வாக்கிங் போய்க் கொண்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்..


இனி எங்கள் விவாதம்.. சிவப்பு எழுத்தில் இருப்பது நான் பேசியவை...

"ஏன் ராஜா.. உங்க அப்பா இந்த வயசில சும்மாத் தானே பொழுதை ஓட்டிக்கிட்டிருக்கார்..எந்த கவலையும் இல்லை.. இப்ப்டி TV முன்னால பொழுதை வேஸ்ட் பண்றாரே.. நாடு இருக்கிற நிலைமையில இவங்களெல்லாம் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கே.. கொஞ்சம் ஏதாவது சமூக சேவை பண்ணச் சொல்லக் கூடாதா?"


"என்ன பண்ணனும்கிறீங்க.. எதை எடுத்தாலும் அதுல பாலிடிக்ஸ் வந்துடுது.. வீணான பிரச்சினைகளில் தலையிடறதை அவர் விரும்பலை.. வாழ்க்கையில் நிம்மதி போயிடும்னு நெனக்கிறாரு"


"எதுல தான் பிரச்சினையில்ல... பிரச்சினை-ன்னு சொல்லப் போனால் சாப்பிடறது கூட ப்ரச்சினை தான்.. அவர் தான் வக்கீலாச்சே.. அவருக்குத் தெரியாத ப்ரச்சினையா?"


"வக்கீல் தான்.. அதனால தான் அவர் ஒதுங்கி யிருக்கார்."


"ப்ரச்சினை இல்லாத எவ்வளவோ நிறைய வேலைகள் இருக்கே.. 4 பசங்களைப் பிடிச்சி அவங்களை வாழ்க்கையில் நல்ல முறையில் வழி நடத்தலாம்.. அல்லது அவருக்கு இருக்குற இங்கிலீஷ் அறிவுக்கு நிறைய பேருக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கலாம்.. நிறைய்ய செய்யலாமே ராஜா"


"நான் எப்படி அவருக்குச் சொல்றது.. அவரைப் பொறுத்த வரைக்கும் அவரோட கடமையைச்செஞ்சு முடிச்சிட்டாரு.. எங்களையெல்லாம் நல்லாப் படிக்க வெச்சு கரை சேத்துட்டாரே.."


"அவர் குடும்பத்துக்கான கடமையைத் தானே செஞ்சாரு.. நாட்டுக்கு என்ன செஞ்சாரு?"


"கவர்ன்மெண்ட் வேலை தான் செஞ்சார்.. அது நாட்டுக்குச் செஞ்சது ஆகிடாதா?"


"காசு (சம்பளம்) வாங்கிக்கிட்டுத் தானே செஞ்சாரு.. அதுக்கு மிஞ்சி கடமை இல்லையா?"


"கடமையைச் செஞ்சிட்டாரு.. அதுவே போதும்னு நெனக்கிறாரு.."

"நான் கடமையை செஞ்சே முடிக்கலை-ன்னு சொல்றேன்.. நீ செஞ்சிட்டாரு.. செஞ்சிட்டாருன்னா என்ன அர்த்தம்.. நாடு இருக்குற நெலமைல எல்லாரும் கடமைன்னு நினைக்கிறதுக்கு மேல் செஞ்சாத்தான் நாடு முன்னேறும் ராஜா..."

"நான் யாரையும் கடமைக்கு மேல செய்யணும்-னு எதிர் பார்த்ததில்லை.."


"நெஜம்மாவே வா?"


"ஆமாம்... "

"என்னிக்க்காவது போஸ்ட் ஆபீஸ்லயோ.. பேங்க் லேயோ கியூவில் நின்னிருக்கியா?"


"நின்னிருக்கேனே.."

"அப்போ 11:30 மணிக்கு க்யூவில நிக்கும் போது திடீர்னு கவுண்டர் க்ளார்க்கு காஃபி டயம்-னு சொல்லிட்டு கதவை மூடிக்கிட்டுப் போகும் போது .. "இவ்வளவுபேரு க்யூவில் நிற்கும் போது இவனுக்கென்ன காஃபி-ன்னு" கோபப்பட்டிருக்கியா?"

பட்டிருக்கேன்.. கடுப்பா வரும்.. என்ன பண்றது அவங்க அப்படித்தான்...


"கவுண்டர் க்ளார்க்கைப் பொறுத்த மட்டில் 11:30 - 12 :00 காஃபி குடிக்கவோ அல்லது அவர் விரும்பிய வேலைகள் செய்யவோ அவருக்கு அதிகாரம் இருக்கு.. அதுக்குத் தான் அவருக்குச் சம்பளம்.. அந்த நேரத்திலும் அவர் வேலை பார்க்க வேண்டுமென்று நீ எதிர் பார்த்ததில் .. அவர் கடமைக்கு மேல் செய்ய வேண்டு மென்று எதிர் பார்ப்பது ஆகாதா? இந்தியாவில் 58 வயசுக்கு மேலே ரிட்டயர் ஆகிட்டு நல்ல ஆரோக்கியத்தை வெச்சுக்கிட்டு சும்மா உட்கார்ந்துக்கிட்டு வெட்டிப் பொழுதைக் கழிக்கிற கூட்டம் ஒண்ணு இருக்கு.. அவங்களெல்லாம் ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துப் போட்டுக்கிட்டு செஞ்சா ஒரு பெரிய மாற்றம் கிடைக்குமே..


"செய்யலாம் தான்.. என்னால எங்க அப்பாவை இதெல்லாம் செய் னு சொல்ல முடியாது.. நீங்க வேணுமுன்னா சொல்லிப் பாருங்க.. ஆனா கேக்க மாட்டாரு,,"

"எங்க அப்பாவுக்கு 90 வயசாறது.. நான் அவரையே.. ஏதாவது எடுத்துப் போட்டுக்கிட்டுசெய்யக் கூடாதா-ன்னு சொல்லி.. இப்பல்லாம் அவர் வயசுக்கு நிறையவே செய்யறாரு..உங்க அப்பாவுக்கு சொல்வத்ற்கு உன்னைத் தவிர வேற சரியான ஆள் கிடையாது..சொல்லிப் பாரு.. உன்னால முடியலைன்னா.. நான் சொல்றேன்..."


நண்பர் அரை மனதுடன் சம்மதித்தாலும்.. செய்வாரென்று தோணவில்லை..

நான் இதை பத்தி என் BLOG-ல் எழுதி உங்கள் கருத்துக்களையும் கேட்டுச் சொல்கிறேன் என்று சொல்லியுள்ளேன்..

நீங்களும் தான் சொல்லுங்களேன் !!!!

கீழே உள்ள படம் அவருக்காகத்தான்.. சில சமயங்களில் இவ்வாறு செய்யுங்கள் என தந்தைக்கு மகன் சொல்வது தவறாகாது.. சொல்ல வேண்டிய நேரங்களில் சொல்லாமல் இருப்பது தான் தவறு..

"செயத்தக்க அல்ல செயக்கெடும்.. செயத்தக்க

செய்யாமை யானும் கெடும்"

என்று என் வள்ளுவர் தாத்தாவே சொல்லியிருக்கார்..





படம்: ஓடம் ஒரு நாள் வண்டியில் போனால் தவறில்லை தான்....

6 comments:

பல்லு பிச்சை said...

//இவர் செய்வது சரியா?//

சரிதான்.

சீமாச்சு.. said...

பல்லு பிச்சை சார்.. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

ILA (a) இளா said...

அண்ணா, நீங்க சொல்றதும் சரிதான், அவரு சொல்றதும் சரிதான். இப்போ செய்யுற வேலையே மனசுக்கு திருப்தி இல்லைன்னு சமூக சேவை செய்யற ஆட்களுக்கு வேணுமின்னா அது சரியா வரும். இதுக்கு வயசு முக்கியமில்லீங்களே, மனசுதான் முக்கியம்...

ILA (a) இளா said...

அண்ணா, நீங்க சொல்றதும் சரிதான், அவரு சொல்றதும் சரிதான். இப்போ செய்யுற வேலையே மனசுக்கு திருப்தி இல்லைன்னு சமூக சேவை செய்யற ஆட்களுக்கு வேணுமின்னா அது சரியா வரும். இதுக்கு வயசு முக்கியமில்லீங்களே, மனசுதான் முக்கியம்...

அகரம் அமுதா said...

அனுபவ சாலிகள் வயதாகிவிட்டது என்று சாக்குப்போக்கு சொல்லி வீட்டில் முடங்கிக்கிடக்காமல் தனக்குகந்த வேலையை அவர்களாகவே எடுத்துச் செய்வார்களேயானால் நாடும் நலம் பெறும் வீடும் நலம் பெரும். வாழ்த்துகள்..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வயதானவர்களுக்கும் புரடெக்டிவிட்டி இருக்க வேண்டும் என நினைப்பதில் தவறில்லை.ஆனால் அவர்கள் முன்வந்து செய்ய வேண்டும் அல்லது முன்வர வைக்கவேண்டிய அளவு தன்னூக்கம் கொடுக்கும் தலைவர்கள் இருக்க வேண்டும்.
இரண்டும் இந்தியாவில் இல்லை !!!!!!!