Wednesday, July 30, 2008

68. மேயருக்கு 151 சவரன் தங்க மாலையா????

வேலூர் மாநகராட்சி ஆகப்போவுதாம்..

அதுக்கு ஒரு புது மேயர் பதவி கிடைக்கப் போகுதாம்.. அந்த மேயருக்கு 151 சவரனில் தங்க மாலை பொதுமக்கள் பணத்தில் வசூலித்துப் போடவேண்டுமாம... இது எந்த ஊரு நியாயம்கிறேன்?????? 151 சவரன் தங்க மாலை போட்டுக்கிட்டாத்தான் அவரு மேயரா??

எடுத்ததுக்கெல்லாம் பகுத்தறிவு பேசுபவர்கள்.. இதை ஏன் யோசிக்க மாட்டேனென்கிறார்கள்??

படத்தில் இருக்கும் இந்தப் பொண்ணே தேவலாம் போல இருக்கு.. அப்பா வூட்டுலேருந்துதான் நகை போட்டுக்கிட்டு வந்திருக்கு (அரசியல்வாதி பொண்ணாயில்லாத பட்சத்தில்...)


குமுதம் ரிப்போர்ட்டரில் சுட்டது... படியுங்கள்..சாரதி மாளிகை என்கிற வணிக வளாகத்தில் உள்ள சங்கத்திடம் இந்த வசூல் ராஜாக்கள், `மாநகர மேயருக்கு 151 சவரனில் சங்கிலி போட வேண்டும். அதற்காகப் பத்து சவரன் தங்கம் தாருங்கள்' எனக் கேட்டு நச்சரித்துள்ளனர். `ஒரு சவரன் மட்டும் தான் தர முடியும்' என்று அந்த சங்கத்தின் முக்கிய நிர்வாகி ஒப்புக்கொண்டுள்ளார். இதுபோல மார்க்கெட் சங்கத்திடம் ஒரு லட்ச ரூபாய் கேட்டிருக்கிறார்கள். அந்தச் சங்கம் ரூ.50 ஆயிரம் தர ஒப்புக்கொண்டுள்ளது!'' என்றனர் காங்கிரஸார் கொதிப்புடன்.


வேலூர் நகைக்கடைக்காரர்களிடம் மொத்தம் 151 சவரன் தங்கம் கேட்டுள்ளனர். அவர்களோ 51 சவரன் மட்டுமே தர முடிவு செய்துள்ளனர்.அதுதவிர லாட்ஜ்காரர்கள், மணல் திருடர்கள் என்று பலரிடம் வசூல் வேட்டை கனஜரூராக நடந்து கொண்டிருக்கிறது'' என்றனர் அவர்கள்.


லோக்கல் அமைச்சர் துரைமுருகனின் ஆருயிர் சகோதரர் துரைசிங்காரம்தான் விழா ஏற்பாடுகளைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார். முதல்வர், அமைச்சர், மாவட்டச் செயலாளர், சேர்மன் ஆகியோரின் பெயரைச் சொல்லி வசூல் வேட்டை நடந்தாலும் கூட அவர்களின் காதுகளுக்கு இந்தத் தகவல் போய்விடக் கூடாது என்பதில் வசூல் திலகங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.


இதுபற்றி சேர்மன் கார்த்தியிடம் பேசினோம்.


``என்ன சார் செய்வது? சின்னச் சின்ன பிரச்னை இருக்கத்தான் செய்யும்? நான் எந்த வசூலுக்கும் போகவில்லை. மற்ற மாநகராட்சிகள் தொடங்கிய போது அந்தந்த நகரத்தில் உள்ள வியாபாரப் பெருமக்கள்தான் மேயரின் தங்கச்சங்கிலிக்குத் தேவையான சவரனை அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் வேலூர் வியாபாரிகளும் தாமாக முன்வந்து தங்கம் தரத் தயாராக இருக்கிறார்கள். (தானாத்தர முன்வந்த புண்ணியவான்களே... நல்லாயிருப்பீங்கய்யா நீங்க !! -சீமாச்சு) யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. "

என்று முடித்துக் கொண்டார் அவர்.
4 comments:

rapp said...

அடபாவமே. கொள்ளை அடிக்க விதவிதமா வழி கண்டுபிடிச்சிக்கிட்டே இருக்காங்க. படத்தில் இருப்பது தாவூத் இப்ரஹீம் பொண்ணுங்க

ச்சின்னப் பையன் said...

படத்திலே இருக்கறவன பாருங்கய்யா!!! ஒரு பொட்டு தங்கம்கூட இல்லாமே நிக்கறான்... ரொம்ம்ம்ம்ம்ப நல்லவனா இருப்பான் போலிருக்கு....

பழமைபேசி said...

அய்யா, மன்னிக்கணும். சனங்க மாட்டி விட்டுட்டாங்க. உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கொக்கி போட்டு இருக்கேன். உடனே நம்ம பக்கத்துக்கு வாங்களேன்!!

Namitha kutti said...

enakku andha 151 savaran vaangi kudu machaaan..