Wednesday, August 08, 2007

50. தாலாட்டுகளும்.... காமெடிகளும்...


1975-ல் மயிலாடுதுறையில் நடந்ததாக என் அப்பா சொன்னது:

10 வயது பெண்ணொன்று அவள் தங்கையைத் தூளியில் போட்டுத் தூங்க வைத்துக்கொண்டிருந்த போது பாடிக்கொண்டிருந்த ..தாலாட்டு....


நான் கேட்டேன்.. அவன் தந்தான்..
தா...லா...ட்டும் தா..யா...னேன்..........

(அப்பொழுது பிரபலமான ஒரு மெலோடியஸ் பாட்டு.. எனக்கும் பிடிக்கும்)..

அதன் அர்த்தத்தையும் பாடும் பெண்ணின் வயதையும் சூழ்நிலையையும் நினைத்து வியந்ததாக அப்பா சொல்லியிருக்கிறார்..


oOo

1990 களில் என் நண்பன் மார்ட்டின் சொன்னது:

வாசு.... (என்னை வாசு என்று வித்தியாசமாகக் கூப்பிடும் வெகு சிலரில் ஒருவன்..)

என் தங்கையை ஒரு நாள் ..தூளியில் வைத்து தூங்கப் பண்ணிக்கிட்டிருந்தேன்.. அப்ப ஒரு பாட்டுப் பாடினேன்...

அப்பத் தான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த எங்க அப்பா என்னை பெல்டை வெச்சி விளாசியெறிஞ்சுட்டாருடா...

"அப்படி யென்னடா மச்சி.. பாடினே..?" - இது நான்

"மாங்கா திருடி திங்கிற பொண்ணே மாசம் எத்தனையோ?.." - எம்ஜியார் பாட்டுப் பாடினேன் என்றான்..


oOo

2007-ல் (அமெரிக்கவில் வசிக்கும்) என் நண்பர் அரவிந்தன் சொன்னது...

"இன்னிக்கு என் ச்சின்னப் பையனைத் தூங்கப் பண்ண பாட்டுப் பாடிக்கிட்டிருந்தேன் வாசன்... "

"என்னப் பாட்டுங்க..?"


"உதயகீதம் படத்திலிருந்து... ஒரு பாட்டு..'

"பா..டு நிலாவே..." என்று தொடங்குமே அது...

அந்தப் பாட்டுல.. வரும்....

"பால் கொடுத்த நெஞ்சிலே... ஈரம் இன்னும்... காயலே....
பால் மணத்தைப் பார்க்கிறேன்... பிள்ளை உந்தன் வாயிலே..."


இந்த வரிகளைப் பாடி முடித்ததும்.. அவர் 9 வயது பையன் யஷ்வந்த் சொன்னது..

"Daddy.. Stop singing that song.... you are singing girly stuffs.."

6 comments:

துளசி கோபால் said...

அரை நூறுக்கு வாழ்த்து(க்)கள். இது அறுநூறாகணும்,

sriram said...

Dear SSV,
Congratulations on your half century, though I have been introduced to you and to ur writings very recently, I have finished all your posts and really enjoyed reading them. Expecting posts more often in future......

Endrum Anbudan
Sriram

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாழ்த்துக்கள் சீமாச்சு.

காமெடி தான் போங்க தாலாட்டு! ஒரு வேளை ஜோக் சொல்லித் தூங்க வைக்கும் காலமும் வருமோ?

//Daddy.. Stop singing that song.... you are singing girly stuffs..//
நீ பேசு நிலாவே! தேன் கவிதை! :-)))

சீமாச்சு.. said...

@துளசியக்கா.
வாழ்த்துக்களுக்கு நன்றி.. அப்படி..இப்படி ஆரம்பிச்சு 50 பதிவுகள் ஆயிடிச்சு.. இன்னும் எழுத வேண்டியது நிறைய விஷயங்கள் இருக்கு.. உங்களைப் போன்றவர்களின் ஆதரவின் மூலம் எழுத ஆர்வம் கிடைக்கும்.

@ஸ்ரீராம்..
வருகைக்கு நன்றி.. சென்ற வாரம் சந்தித்தது மகிழ்ச்சி.. டுபுக்கு அண்ணா exclusive வாசகர் நமக்கும் வாசகராயிருப்பது தனி கெளரவம் தான்..

அன்புடன்,
சீமாச்சு

சீமாச்சு.. said...

ரவிசங்கர்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

இந்த வார இறுதியில் சந்திப்போம்.

அன்புடன்,
சீமாச்சு

ILA (a) இளா said...

அரை நூறுக்கு வாழ்த்து(க்)கள்.