Wednesday, August 22, 2007

55. வாத்தியாரப் பத்தி.. எல்லாரும் எழுதுங்கய்யா...!!

நம்ம சிந்தாநதி.. ஆசிரியர் தினத்துக்காகப் போட்டி அறிவிச்சிருக்காரு.. உங்களுக்கும் பரிச் உண்டு.. நீங்க எழுதிய ஆசிரியருக்கும் பரிசு உண்டு..



இதனால் பல நல்ல விஷயங்கள் வெளீயில வரும்-னு நம்புறோம்...



தயவு செஞ்சு எழுதுங்க..







ச்சின்ன வயசுல என்னையெல்லாம் உக்காத்தி வெச்சுப் பாடம் சொல்லிக்கொடுத்த அந்த ரொம்ப நல்ல ஆசிரியர்கள் இல்லாம இருந்திருந்தால்.. நானெல்லாம் .. இந்தப் பையன் மாதிரி பஞ்சு மிட்டாய் விக்கத் தான் போயிருப்பேன் !!
இப்ப ப்திவுலகத்துல இருக்கற நிறைய பதிவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களென்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்..
ஆசிரியர் தொழில் மாதிரி நன்றியும் உடனடிப் பாராட்டும் கிடைக்காத தொழில் உலகத்துல கிடையாது...
என் வேலையில யெல்லாம் நான் ஏதாவது நல்லா பண்ணினால்.. அன்னிக்கே யாராவது பாராட்டிடுவாங்க.. அல்லது பாராட்ட வெச்சிடுவேன்...

இந்த ஆசிரியர் தொழில்ல பாருங்க.. மாணவன் நிறைய மதிப்பெண்கள் வாங்கினா.. 'மாணவன் புத்திசாலி' என்ற பெயர் வருமே தவிர.. ஆசிரியர் புத்திசாலி என்றோ நல்லவரென்றோ யாரும் சொல்வதில்லை..

ஆனா இதே மாணவன் சரியாகத் தேர்வாகவில்லையென்றால்.. உடனடிப் பழி.. ஆசிரியர் தலையில் விழும்.. "வாத்யார் சரியில்ல சார்... அப்புறம் எப்படிப் பசங்க படிப்பாங்க..." என்பது தான் பேச்சாக இருக்கும்..
நல்லா.. யோசிச்சுப் பாருங்க...

உங்களுடைய முன்னேற்றத்துல.. இப்ப நீங்க இருக்குற நிலைமைக்கு நிச்சயம் பல ஆசிரியர்கள் காரணமாக இருப்பார்கள்..
உங்களுக்கு நினைவில்லையென்றால் உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள்.. நிச்சயம் நினைவூட்டுவார்கள்..
அந்த ஆசிரியர்களையெல்லாம் நினைவூட்ட ஒரு சந்தர்ப்பம் இது.. அவங்க செஞ்ச நன்மைக்கெல்லாம்..இப்ப ஒரு பாராட்டாவது.. பாராட்டி எழுதுங்க.. அவங்க மனசு குளிரும்...
தயவு செஞ்சு...

பரிசு பெற வாழ்த்துக்கள்..
காதைக் காமிங்க.. சிந்தாநதி சொன்ன மாதிரி.. ச்சின்ன பரிசெல்லாம் இல்லை.. நிஜமாவே.. பெரிய பரிசாத் தரத்தான் ஆசைப்படறோம்..
முடிஞ்சால் உங்க தங்கமணி/ரங்கமணியையும் எழுதச் சொல்லுங்க.. பரிசு ஒரு பட்டுப்புடவைக்காவது நிச்சயம் ஆகும்...

5 comments:

sriram said...

Inda ulagame oru Palli arai and every experience is a master.
Chennai thantha anubhavam / Paadam Delhi la 5 varusham kupppai kotta sollikoduthathu, Delhi anubhava paadangal Bostonla kuppai kotta romba helpful la irukku.

Thavira, primary school teacher Shyamala, High school class teacher Dhanushkoti, Higher secondary school Chemistry teacher Selvam, College Tamil vathi Velayah mattrum Enakku "zha" varavaitha Varadharajan evergal illamal naan nichayam illai.
Thanks for giving this opportunity to make me think about them.
Endrum Anbudan
Sriram

ILA (a) இளா said...

கண்டிப்பாங்க. நாளைக்கே வரும் ஆசிரியரைப் பத்தி

சீமாச்சு.. said...

ஹூம்...
இன்னும் யாரும் எழுதியதாகத் தோணவில்லை.. நெறய்ய பேர் எழுதுவாங்க-ன்னு நினச்சாலும்.. இன்னும் ஒருத்தரும் வரலையே...

அன்புடன்
சீமாச்சு

சதுக்க பூதம் said...

Please see "Pallikoodam" movie. You will like it

சீமாச்சு.. said...

//At 10:21 PM, August 29, 2007, சதுக்க பூதம் said...
Please see "Pallikoodam" movie. You will like it

//
நன்றி சதுக்க பூதம்.. நிச்சயம் அந்தப் படம் பார்க்கிறேன்.

நன்றாக இருக்குமென்று இன்னும் ஒரு நண்பரும் சொல்கிறார்.

பார்த்து விட்டு அவசியம் எழுதுகிறேன்.

அன்புடன்,
சீமாச்சு