Wednesday, August 22, 2007

54. என்னே கலைஞரின் சொற்சிலம்பம்..!!

கத்தரிக்காய் வாங்க கடைக்குப் போறீங்க-ன்னு வெச்சுக்கலாம்....

எல்ல எடத்துலயும் கத்தரிக்காய் கிலோ 10 ரூபாய் ன்னு போட்டிருக்கு-ன்னு பாக்கறீங்க...ன்னும் வெச்சுக்கலாம்.. (எனக்கு சென்னயில் இப்ப கத்தரிக்காய் என்ன வெலைன்னு தெரியாது... விவசாயி இளா கிட்ட தான் கேக்கணும்... )

ஒரே ஒரு ஆளு மட்டும் "கத்தரிக்காய் கிலோ 100 ரூபா" னு போட்டிருக்காருனு வெச்சுக்குவோம்..

அவர் கிட்ட போயி, "என்னப்பா.. கத்தரிக்காய் கிலோ 100 ரூபா சொல்றே.. கொறக்கக் கூடாத.. அங்கேயெல்லாம் கிலோ 10 ரூபா தானே சொல்றாங்க.." அப்படீன்னு கேட்டாக்க.. அவர் என்ன சொல்லலாம்?


  1. "சார் இது சிங்கப்பூர் கத்தரிக்கா சார் .... நேத்து ராத்திரி பிளேன் ல வந்துது சார்"
  2. 'எனக்கு வாங்கின வெலையே கிலோ 95 ருபா சார்..'
  3. "இது ஸ்பெஷல் உரம் போட்டு வெளஞ்சுது சார்... இத்ச் சாப்பிட்டா.. நோய் வராது சார்.."

இந்த மாதிரி ஏதாவது சொன்னால்... செய்தி உண்மையோ.. பொய்யோ.. சொல்வதில் ஏதோ ஒரு நியாயமோ அல்லது.. ஒரு கத்தரிக்காய் சம்பந்தப்பட்ட வேல்யூ இருப்பதாகத் தெரிகிறது...

அதை விட்டிவிட்டு.. "நான் ஏழை சார்.... அதனால தான் கிலோ 100 ரூபாய் போட்டிருக்கேன்.." அப்படீன்னு சொன்னா.. அதுல என்ன நியாயம் இருக்கு -ன்னு ச்சொல்றது????

oOo

கத்தரிக்காயை விடுங்க.. கலைஞருக்கு வாங்க...

எனக்குத் தெரிஞ்சு... இது வரைக்கும் எந்தக் கேள்விக்கும் கலைஞர் பதில் சொல்லாமலேயே இருந்ததில்லை... கேள்வி கேக்குறவனுக்கு எல்லாம் பதில் கிடைக்கணும் என்பது ஒவ்வொருவனின் அடிப்படை உரிமை-ன்னு நம்பி பதில் சொல்பவர் போலே தான் (அது தனக்குத்தானே.. கேட்டுக்கிட்ட கேள்வியாக இருந்தாலும் ..) எனக்குத் தெரிகிறது...அந்த பதிலில் கேட்டவனுக்குத் திருப்தியோ .. அல்லது பாதிக்கப் பட்டவனுக்கு ஆறுதலோ.. கெடச்சாலும் கெடைக்கா விட்டாலும்.. தமிழ்மொழி.. ஒரு இஞ்ச்சாவது வளர்ந்திருக்கும்-னு நம்புற உடன்பிறப்புக்கள் இருக்கத்தான் இருக்காங்க...

அப்புறம்.. கலைஞரின் நாவன்மையென்றோ.... சமயோசிதமான பதில் என்றோ.. எதிர் கட்சியின் வாயைச் சாதுர்யமாக அடக்கினாரென்றோ பதிவோ புத்தகமோ எழுதிட்டாப் போறது....!!

அது போல கலைஞரின் சமீபத்திய சொற்சிலம்பம்...

கேள்வி: தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றதே.. ஏன்?

கலைஞரின் நாவன்மை: தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்கள்.. தமிழகத்தின் நிதி நிலைமைக்கு ஏற்றவாறு தான் இருக்கிறது...

பாராட்டாமல் இருக்க முடியவில்லை....

12 comments:

Seemachu said...

இந்தப் பதிவு.. சூடான இடுகைகளில் ரெண்டு நாள்.. நின்னு ஆடும்-னு 'பெட்டு' கட்டறேன்.. யாராவது மறுக்கறதுக்கு உண்டா?

சீமாச்சு...

nagoreismail said...

ஒரு பேட்டியில் லிங்குசாமி என்ற இயக்குனர் கலைஞரிடம் 'உங்களுக்கு ஒரு முறை கூட கடவுள் இருப்பாரோ என்று தோன்றியதே இல்லையா..?' என்று கேக்க, அதற்கு கலைஞர் அவர்கள், 'அப்படி ஒரு முறை கூட எனக்கு தோன்றாததற்கும் அவர் தான் காரணமோ..?' என்று கூறினார்.
நாகூர் இஸ்மாயில்

ILA(a)இளா said...

கலைஞர் சிலம்பம் வார்த்தையில மட்டும் இல்லிங்க செயல்லயும் இருக்கும். அதுக்கு உதாரணம் கேபில்-கேபில் Less network பத்தி சொன்ன பதில். உண்மைதானே நிதி நிலைமை இருக்கிற நிலைமையிலதான் டிக்கெட் இருக்கும். பெங்களூரில, ஹைதராபாத்துல டிக்கெட் விலை தெரியுங்களா? அதுக்கு தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை

Seemachu said...

அனானி நண்பரே.. பதிவின் கோணத்தைத் திசைதிருப்பும் விதமாக வந்துள்ள உங்கள் பின்னூட்டம் தற்காலிகமாக மட்டுறுத்தப் படாமல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.. பின்னர் வெளியிடுகிறேன்.. நிச்சயம் பதிலும் சொல்கிறேன்..


நீங்கள் கேட்ட கேள்வியும்.. கலைஞர் அடிக்கடி திசை திருப்ப எடுத்துக் கொள்ளும் தந்திரம் தான்.. உங்களைச் சொல்லிக் குற்றமில்லை...

அன்புடன்,
சீமாச்சு..

Seemachu said...

//அதுக்கு உதாரணம் கேபில்-கேபில் Less network பத்தி சொன்ன பதில்//

இளா.. உண்மையா இந்த பதில் நான் படித்ததாக எனக்கு நினைவில்லை.. நினைவிருந்தால் பின்னூட்டமிடுங்களேன்..


அன்புடன்,
சீமாச்சு..

Seemachu said...

இஸ்மாயில் அண்ணே.. வாங்கண்ணே.. முதல் முறையா நம்ம பதிவுக்கு வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. வருக வருக..

//'அப்படி ஒரு முறை கூட எனக்கு தோன்றாததற்கும் அவர் தான் காரணமோ..?//

கலைஞரின் சாதுர்யத்தை என்றுமே நான் குறைத்து மதிப்பிட்டதில்லை..

அன்புடன்
சீமாச்சு...

Anonymous said...

oru palaya pattu ninaivil varugirathu.indha thinnai pechu veeraridam oru kannay irukkanum annachy.vizzy

sriram said...

Dear Vasan
Nehru vin Magale varuga, Nilaiyana aatchi tharuga.... the best caption of all the elections held so far (this one happened right after the emergency) and the best andar balti by M.K
Endrum Anbudan
Sriram

nagoreismail said...

"இஸ்மாயில் அண்ணே.. வாங்கண்ணே.. முதல் முறையா நம்ம பதிவுக்கு வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்"

இல்லை தம்பி, தங்களின் அனைத்து பதிவையும் படிப்பவன் தான், இப்பொழுது தான் பின்னூட்டமிடுகிறேன், தொடர்ந்து எழுதுங்கள், படிக்கிறேன், பின்னூட்டமிடுகிறேன் - நாகூர் இஸ்மாயில்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தம்மி நான் ஈழத்தவன் காத்தால ஒரு கலைஞர் பற்றிய பதிவில் அவர் "சாதுரியம்" பற்றிப் பின்னூட்டியதற்கு ஒரு, பெயர் போடக் கூட திராணியிலாச் சீவன் வந்து என்னை நாடற்ற அனாதை; உனக்கு என்ன? திமிர்
என்று செம்மொழியாம் தமிழில் திட்டியது.(எனக்கு இப்போ இரு நாடு அது வேறு விடயம்) அது கலைஞர் பாசறையில் கற்றததே...
மிக அழகான அவர் நாவன்மையை விளக்கியுள்ளீர்கள். கலைஞர் நாவன்மை மிக்கவர்; ஆனால் அவர்
வாயிலிருந்து வருவதெல்லாம்....வல்லதல்ல....
மஞ்சள் துண்டுக்கு கேளுங்க.....
இதை எங்க ஊருப் பெருசுகள் "வட்டுக்கோட்டைக்கு போற வழி கேட்டால்; துட்டுக்கு இரண்டு கொட்டப்பாக்கு என்றானாம்"...என்னுங்கள்...

Seemachu said...

யோகன்,

//ஒரு, பெயர் போடக் கூட திராணியிலாச் சீவன் வந்து என்னை நாடற்ற அனாதை; உனக்கு என்ன? திமிர்
என்று செம்மொழியாம் தமிழில் திட்டியது//

கவலைப் படாதீங்க.. நீங்க ஒண்ணும் தமிழ் வலைப்பதிவுகளுக்குப் ஒண்ணும் புதிசில்லையே...

கருத்துக்கு பதில் சொல்ல முடியலைன்னா.. பெல்ட்டுக்குக் கீழே தாக்க்கும் பிராணிகள் இங்கு உண்டு..

இடது காலால உதைச்சிட்டுப் போய்க்கிட்டேயிருங்க... வாழ்க்கையில் உயர்வுகளுக்கு வானமே இல்லை.. கலக்குங்க !!

தனிமனித ஆராதனைகளில் பொழுதுபோக்குவோர்.. அவர்கள் வழியில் செல்லட்டும்.. இவர்கள் நம் நாட்டின் கேடுகள்.. கூட வாழ்ந்து தான் ஆகவேண்டும்.. அது இறைவன் சித்தம்
அன்புடன்
சீமாச்சு..

koothanalluran said...

இஸ்லாமிய இலக்கியத் தமிழ் மாநாட்டில் இஸ்லாமிய இலக்கியத்திற்காக பல்கலைகழகத்தில் தனி இருக்கை வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள் கலைஞரிடம். அப்போது மேடையில் துணைவேந்தர் சாதிக் கலைஞர் அருகே அமர்ந்திருந்தர். கலைஞர் தன் உரையில் இங்கே இஸ்லாமிய இலக்கியத்திற்கு இருக்கை கேட்டார்கள். துணை வேந்தர் சாதிக்கால் சாதிக்க முடியாததை நான் சாதிக்கிறேன் என வாக்களித்தார். (கைதட்டல் பறந்தது)
பி.கு இன்று வரை கலைஞர் தன் வாக்கை காப்பாற்ற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது)