Wednesday, August 15, 2007

53. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போண்டா சாப்பிடுவாரா?

நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினி போண்டா சாப்பிடுவாரா? வலையுலகில் பெரிய கேள்வி அதுதான்..

நமக்கெல்லாம் போண்டா-ன்ன உடனேயே யாரு ஞாபகம் வரும்-னு எல்லோருக்கும் தெரியும்..

தமிழ் வலையுலகின் மூத்த பதிவர், வலையுலக டெண்டுல்கர்.. இணைய உலக முதல் பிரபல போண்டாப் பிரியர்.. டோண்டு மாமா ஞாபகம் வந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை..


நம்ம ரஜினி சாருக்கும் போண்டா.. அதுவும் பெங்களூரூ போண்டா சாப்பிடணும்-னு ஆசை வந்திடிச்சாம்...


நம்ம ரசிகர்களெல்லாம்.. அவர் கட் அவுட்டுக்கு.. பாலாபிஷேகம் பண்ணிக்கிட்டிருக்கச்சே...


அவர் மாறு வேடத்துல......டோண்டு சார் பிஸியா இருக்கறதுனால.. அவர் மாதிரி இருக்கற் ஒருத்தர் கூடப் போயி.... போண்டா சாப்பிட்டு வந்திருக்காராம்...





நீங்களே பாத்துக்குங்க...!!!!



வலது பக்க கடைசியில இருக்கிறவர் நம்ம வலையுலக டெண்டுல்கர் மாதிரியில்லை... !!!!!

பி.கு: நல்ல வேளை இந்தப் படம் நம்ம விகடன் ஆசிரியர்கள் கண்ணில் படவில்லை.... பட்டிருந்தால்.. "சூப்பர் ஸ்டாரின் போண்டா பயணம்.. எக்ஸ்குளூசிவ் போட்டோக்கள்" என்று விகடன் முத்திரை வாட்டர் மார்க்கோட படங்கள் போட்டு... போகும வழியில் அவர் சொன்னதா ஒரு 38 குட்டிக் கதைகளையும் சேர்த்து... ஒரு 24 வாரத் தொடர் எழுதியிருப்பாங்க!!

தொடரின் முடிவில் சூப்பர் ஸ்டார் கிட்ட கேட்டு ஒரு 4 வார பேட்டியும்.. அவருக்குப் பிடித்த மாதிரி எப்படி போண்டா போடுவது என்ற ரெசிப்பியும் கேட்டு வாங்கி.. தூள் கெளப்பியிருப்பாங்க..

நம்ம அதிர்ஷ்டம்...

12 comments:

Anonymous said...

Romba super!

Indha vikatan karan attoliyam thaanga mudila..Yedho thamizhan uyiroda irukkaradhe indha cinema vukkuthaan apdingara maadhiri oru maayaiyai yetpaduthi makkalai nallaa brainwash panranunga!

Nalla nakkal ungaklukku! Keep it up!

Anonymous said...

Romba super!

Indha vikatan karan attoliyam thaanga mudila..Yedho thamizhan uyiroda irukkaradhe indha cinema vukkuthaan apdingara maadhiri oru maayaiyai yetpaduthi makkalai nallaa brainwash panranunga!

Nalla nakkal ungaklukku! Keep it up!

dondu(#11168674346665545885) said...

//வலது பக்க கடைசியில இருக்கிறவர் நம்ம வலையுலக டெண்டுல்கர் மாதிரியில்லை... !!!!! //

:)))))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

sriram said...

Dear Vassan,
Good Post, enjoyed reading it.
Few things coming to my mind upon reading this post:
a. Paalabhishekam to the cut outs : Evangallam Thirunthave Mattangala???
b. Rajinikanth & His Friends : Kudos to Rajini, Even after reaching the kinda position he has attained, he is still down to earth and has not forgotten his old time frenz, this is Highly appreciable...
c. Rajini's Family : though I have praised rajini on the previous point, the same is a minus for him, he is either busy acting or out on his own to Himalayas or hangs out with his friends, has he ever gone out with his family or spent enough time with his family? I really doubt. Think Latha, Ishwarya and the other daughter were forced to live with money he makes and not with him.
d. Ananda Vikatan : No Comments, but we all critize Vikatan and still renew membership and continue to read. Film and Print Industry keeps saying that they give what the viewers / readers want / Like and we all keep cribbing like this and keep reading/ watching, what do u say?
Endrum Anbudan
Sriram

ILA(a)இளா said...

//வலது பக்க கடைசியில இருக்கிறவர் நம்ம வலையுலக டெண்டுல்கர் மாதிரியில்லை... !!!!! //
இல்லை, இல்லவே இல்லை

J. Ramki said...
This comment has been removed by the author.
J. Ramki said...

u've delivered so many hidden messages.. :-)

Thanks for the post!

Seemachu said...

//J. Ramki said...
u've delivered so many hidden messages.. :-)


//
அன்பு ரரா,
ஒரு தீவிர ரஜினி ரசிகர் இந்தப் பதிவை ஒரு நல்ல முறையில் சொலல வந்த செய்தியோடு எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி அளித்தது..

அது சரி..

ஒரு மாயவரத்துக்காரனுக்குத்தான் இன்னொரு மாயவரத்துக்காரனைப் புரியும்!!

ஆமா.. ரஜினிராம்கி.. எப்போ ஜெ.ராம்கி ஆனீங்க...?

பதிவைப் படிச்சதுக்கப்புறம்-னு சொல்ல வேணாம்

அன்புடன்,
சீமாச்சு...

J. Ramki said...

ராமகிருஷ்ணன், ராம்கி, ரஜினி ராம்கி, கோயிஞ்சாமி, மாங்கா மடையன், முட்டாள் (உபயம் - மானமிகு மருத்துவர் அய்யா!) என எல்லாமே நான்தான்! எந்த கெட்அப்பா இருந்தாலும் உள்ளே இருக்கும் சரக்கும் ஒண்ணுதானுங்களே!

ஒரு அதிர வைக்கும் விஷயத்தை ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போய்ட்டீங்க. அதான் எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. விவரமா சொல்லலாம். ஆனால், ஏற்கனவே இருக்கும் ஆப்பையே எடுக்க முடியலை.. இதுல இன்னொரு ஆப்பா? அப்படியே ரகசியமாக சொல்லி முடிச்சாலும், 'அதெல்லாம் நமக்கெதுக்கு ராஜா' அப்படின்னு அடுத்த விஷயத்துக்கு போய்டுவீங்க..அதனால...அப்படியே ஜூட்!

உண்மைத் தமிழன்(03027376146007401490) said...

சந்தடி சாக்கில எங்க டோண்டு சாரையும் நக்கல் செய்தது உங்கள் காமெடியின் உச்ச கட்டம்.

தஞ்சாவூரான் said...

ரஜினிகாந்த் போண்டா சாப்ப்ட்டா என்ன? உப்புமா சாப்ட என்ன?

திருந்துங்கப்பா... நாட்ல எவ்ளவோ விஷயம் இருக்கு கவலைப்பட.

Anonymous said...

Good post and this post helped me alot in my college assignement. Thank you as your information.