Saturday, August 11, 2007

51. இந்திய ஐ.டி. துறையினரிடம் திறமைக்குறைவா..?

அமெரிக்காவில் ஒரு பெரிய வங்கியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. தன் வேலை பார்க்கும் இடத்தில் சில இடங்களை நிரப்ப வேண்டுமென்றும் தகுதியான் நபர்கள் நண்பர்களிருந்தால் தெரிவிக்கும்படியும் சொன்னார்...

அவர் சமீபத்தில் நிறைய பேரை (குறிப்பக இந்தியரை) நேர்முகத்தேர்வு செய்திருந்ததால் அவரின் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்..

அவர் சொன்னதிலிருந்து சில கருத்துக்கள்:




  1. இந்திய ஐ.டி துறையினரிடம் (அதுவும் இளைய .. 26லிருந்து 35 வயதுக்குட்பட்டோரிடம்) திறமைகள் தற்போது கேள்விக்குரியதாகவெ இருக்கிறது. அவரவர் resume-ல் சொல்லப்படும் திறமைகளையும் அடிப்படை அறிவுத்திறன்களும் நிரூபிக்கக்படும் அளவு இல்லை.
  2. அடிப்படை கணிணி சார்ந்தத அறிவுத்திறன் ரொம்பக் குறைவாகவே இருக்கிறது
  3. நேர்முகத் தேர்வுக்கும்.. தொழில் சார்ந்த கேள்விகளுக்கும் திறமையாக பதில் சொல்ல இயலாதவர்களாகவே இருக்கிறார்கள்.
  4. வசதியான வேலை (அன்றாட வாழ்க்கையில் சுலபமான வேலை) அல்லது சவலான வேலை இரண்டுக்கும் வாய்ப்புகள் வரும் பட்சத்தில் சவாலான வேலை எடுத்துச் செய்யும் மனோபாவம் வெகுவாகக் குறைந்து வருகிறது.

இதெல்லாம் நண்பர் படித்த் குறைபாடுகள். நிறைகள் இல்லாமலில்லை. அவரை பொருத்த மட்டில் 25 பேர் வரை இண்டர்வியூ செய்தும் ஒருவர் கூட திறமையாகத் தேற்வில்லையே என்ற ஆயாசம் தெரிந்தது..


இவர் சொன்ன குறைகள் பட்டியலை எடுத்துக் கொண்டு TCS மற்றும் Infosys கம்பெனிகளில் மேலாளர்களாக இருக்கும் என் நண்பர்கள் சிலரிடம் கருத்துக் கேட்ட பொழுது.. அவர்கள் சொன்னது..

  1. இந்த்ப் பிரச்னை கல்லூரிகளிலேயே தொடங்கி விடுகிறது. நமது கல்லூரிகள் பெருகிய அளவு திறமையான பேராசிரியர்கள் பெருகவில்லை.. சென்ற ஆண்டு படித்து முடித்து வேறு வேலை கிடைக்காத மாணவர்களே இந்த ஆண்டு விரிவுரையாளர்களாக வரும் போது என்ன தரம் மாணவர்களுக்குக் கிடைத்து விடுகிறது?
  2. மற்றும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையில் (திறமையோ பாடப்பிரிவோ இல்லை) மட்டும் (for example applications testing, operations or bug-fixing அல்லது ஆணி பிடுங்குவது..) திறமைகளை வளர்த்துக் கொள்வதால் மற்ற துறைகளில் அவ்வளவாகச் சோபிக்க முடிவதில்லை
  3. இப்பொழுது IT இளைஞர்களில் கவனத்தைத் திருப்பும் விதமான் பல விஷயங்கள் பெரூகிவிட்டதால் கற்பதில் அவர்கள் ஆர்வம் குறைந்து விடுகிறது.
  4. முக்கியமாகத் தமிழ் IT இளைஞர்கள் விகடன், குமுதம் என்று இறங்கி விடுகிறார்கள்.. அலுவலக நேரத்தில் இந்தத் தளங்களைப் படிக்காத தமிழர்களே இல்லை என்றார்
  5. இந்தியாவில் இப்பொழுது சவாலான வேலைகள் கிடைப்பதில்லை.
  6. இப்பொழுதெல்லாம் இந்தியாவில் 2 வருடம் .. 3 வருடம் வேலை பார்த்தவனெல்லாம் project lead.. 5 வருடம் வேலை பார்த்தவன் project manager அதுக்கு மேலே வேலை பார்த்தவன் client account executive என்று ஆகும் போது அவன் மூன்றாவது வருடத்திலிருந்தே hands-on experience-ஐ விட்டு விடுகிறான்

நிலைமை இருவர் சொன்ன மாதிரியும் அவ்வளவு மோசமானதாக இல்லை என் நான் பூரணமாக நம்புகிறேன்.... நான் இந்தியாவை விட்டு வந்து இப்பொழுது 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ ஓரிரண்டு வாரங்கள் சென்று வருவதால்.. எனக்கென்று கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளும் அளவு என்னிடம் உறுதியான் செய்திகளில்லை..

தமிழில் வலை பதிபவர்கள் அதிகம் ஐடி துறையினராதலால்.. உங்கள் கருத்துக்கள் என்னெவென்பதைச் சொல்லுங்களேன்..

அறிய ஆவலாயுள்ளேன்..

21 comments:

மு. சுந்தரமூர்த்தி said...

//இந்த்ப் பிரச்னை கல்லூரிகளிலேயே தொடங்கி விடுகிறது. நமது கல்லூரிகள் பெருகிய அளவு திறமையான பேராசிரியர்கள் பெருகவில்லை.. சென்ற ஆண்டு படித்து முடித்து வேறு வேலை கிடைக்காத மாணவர்களே இந்த ஆண்டு விரிவுரையாளர்களாக வரும் போது என்ன தரம் மாணவர்களுக்குக் கிடைத்து விடுகிறது?//

எனக்கு ஐடி துறையைப் பற்றி அறிவும், அனுபவமும் இல்லை. ஆனால் மேற்கூறியதில் உண்மை இருப்பதை சமீபத்தில் ஊருக்குப் போனபோது ஓரிரு மாணவர்களிடம் பேசியபோது தெரிந்தது. பொதுவாக கல்லூரி விரிவுரையாளர்களாக சேர்பவர்கள் பெண்கள். நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியிருப்பது, நீண்ட தூரம் பயணம் செய்து வேலைக்கு போவது, வேலைதேடி வெளியூருக்குப் போவது போன்றவை பிடிக்காத பெண்கள் அல்லது அப்படி விரும்பாத பெற்றோர்களுடைய பெண்கள் தான் ஆசிரியர் வேலைக்கு சேர்கிறார்கள். அவர்களும் சேர்ந்த சில ஆண்டுகளில் திருமணமாகி வேலையை விட்டுப் போய்விடுகிறார்கள். பிறகென்ன, மீண்டும் புதிய பெண்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்களாக சேர அல்லது ஆராய்ச்சியில் சேர UGCயும், CSIR ம் இணைந்து National Eligibility Test (NET) நடத்துகின்றன. இதில் தேறியிருந்தால் அவர்களுக்கு UGC payscale தரவேண்டும். பொறியியல் கல்லூரி ஆசிரியர் தேர்வுக்கு இப்படி ஏதாவது standardized தேர்வு இருக்கிறதா என்று தெரியவில்லை.

Anonymous said...

சீமாச்சு.. இந்தப் பதிவுக்கு ஏங்க.. இந்தக் கயிறு படம்?

சீமாச்சு.. said...

@அன்பு சுந்தரமூர்த்தி,
கருத்துக்களுக்கு நன்றிகள்.. நீங்கள் சொன்னது எனக்குப் புதிய விஷயம். இது போன்ற ஆசிரியர்கள் வருவதால் தான் பயிலும் மாணவர்களுக்கு அடிப்படையே தெரிவதில்லை.


@அன்பு அனானி..

பசங்க.. resume விலும் இண்டர்வியூவிலும் ரொம்ப 'கயிறு சுத்தறாங்க" அல்லது ரீல் விடுறாங்க அப்படீன்னு சிம்பாலிக்கா காட்டுவதற்குத்தான் அந்த கயிறு படம்..

எப்படி நம்ம கற்பனைத்திறன்?

அன்புடன்,
சீமாச்சு..

வவ்வால் said...

பொறியியல் கல்லூரிக்கும் அதே "NET" மற்றும் மாநில அளவில் "SLET"(state level elgible test) என்ற தேர்வு முறை உள்ளது.அரசு பொறியியல் கல்லுரிகளில் வேலை வேண்டும் எனில் கண்டிப்பாக இவை தேவை. ஆனால் பெரும் பாலும் தனியார் கல்லூரிகள் தான் தமிழ் நாட்டில் அவர்கள் குறைந்த சம்பளத்தில் ஆள் பிடிக்க அப்படி எல்லாம் விதி முறைப்பார்க்க முடியாது மேலும் யாரும் தொடர்ந்து அங்கேயே வேலைப்பார்ப்பதில்லை. அதான் இப்படி அலட்சியம் காட்டுகிறார்கள்.

Nakkiran said...

Both are right...

G.Ragavan said...

பதிவின் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். இப்பொழுது இந்தியாவில் இருக்கும் ஐடி துறையினரைப் போன்ற பேராசைக்காரர்களைப் பார்க்க முடியாது. இரண்டு மூன்று வருடங்களிலேயே தங்களைப் பெரிய மென்பொருள் வித்தகராக நினைத்துக் கொள்கின்றார்கள். விதிவிலக்குகள் கண்டிப்பாக உண்டு. ஆனால் பொதுவில் ஆழ உழாமல் அகல உழுது கொண்டிருக்கிறோம்.

ராஜ நடராஜன் said...

இந்திய மென்பொருள் துறை என்று எடுத்துக் கொள்ளலாமா?என்னைப் பொருத்த வ்ரை இந்திய சூழலில் இப்பொழுது சாதிப்பதே பெரிது.சூழல்களையும் சந்தர்ப்பங்களையும் கொடுத்துப் பாருங்கள்.100 நாட்கள் 6 மாதக் கணக்கீடுகளில் கணிப்பதை முன்கூட்டியே கணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.கல்லூரிக் காலங்கள் என்பது ஒரு துறைக்கான வழிகாட்டல் மட்டுமே.இளமையின் குறும்புகள்,நட்பு சூழல்கள்,அலைச்சல்கள்,போக்குவரத்து,வீட்டுச் சூழல்,சினிமா,தொலைக்காட்சியின் தாக்கங்கள்,கணினி தொடர்பு என்று எத்தனையோ கடந்து வரும் போராளிகள் இவர்கள்.இத்தனைக்கும் மத்தியிலும் இவர்கள் சாதிக்கவே செய்கிறார்கள்.

Unknown said...

நெட், ஸ்லெட் ஆகியவற்றுடன் முனைவர் பட்டம் மற்றும் எம்பில் பட்டம் ஆகியவற்றை தகுதியாக அறிவித்திருப்பதாக கேள்விப்பட்டேன்.இது வரவேற்கத்தக்க மாற்றம்தான்.

போன வருட போஸ்ட்-கிராஜுவேட் இந்த வருட ஆசிரியராக பணிபுரிவது சுயநிதி கல்லூரிகளில் மட்டுமே நடக்கும்.அதற்காக அவர்கள் திறமையற்றவர்கள் என்று அர்த்தமில்லை.தமது வயதை ஒத்தவர்கள் என்பதால் தலைமுறை இடைவெளி இன்றி மாணவர்கள் அவர்களிடம் அணுகி பேச முடியும்.சீனியர் ஆசிரியர்கள் சிலர் ஈகோவுடன் இருப்பதும் விஷயத்தை அப்டேட் செய்துகொள்ளாமல் இருப்பதும் ஒருபுறம் நடக்கிறது.

ஆசிரியர் தரத்தை உயர்த்துவது எப்படி என எழுத துவங்கினால் தொடராகவே எழுதலாம்.சந்தையியல்,மேலாண்மை துறை கல்வியை எடுத்து கொண்டால் இந்தியா போகவேண்டிய தூரம் இன்னும் ஏராளம் உள்ளது என்பதை மட்டும் இப்போது சொல்ல முடியும்.

சதுக்க பூதம் said...

10 years back, getting IT job is somewhat difficult and highly competitive.So highly efficient person used to get job.During those period, Indian IT industry is based on consultancy service in US.So every one used spend lot of times in updating themselves.But now, IT industry is based on offshore projects. Most of the projects are support project.Work will not be challanging and learning.
I do not agree in college learning.Most of the interviews conducted here, doesn't check college basics.Experienced people are interviewed based on their technology expertise

ஆயில்யன் said...

கொஞ்சூண்டு தண்ணியில,பெருசா எதோ சாதிச்சிட்ட மாதிரி இந்த குதி குதிக்கும் நம் முன்னோரும் சில சேதிகளை சிம்பாலிக்கா சொல்றாங்க போல..!(நெறையா சம்பளம் கிடைச்சா ஆட்டம் கூத்து போடாதீங்க,அத தக்க வச்சுக்க என்ன பண்ணுமுனு யோசியுங்க...! - இதானே அதுக்கு அர்த்தம்)
படம் சூப்பர்!

பெத்தராயுடு said...

Very true. Very true.

வலையுலகில் இந்தப் பதிவை யாரும் கண்டு கொள்ளாதது ஆச்சரியமாக இருக்கிறது.

என்னுடைய அணியில் 1-2 மாதங்களுக்கொரு முறை ஆட்களை சேர்க்கவேண்டியுள்ளது. இப்பொழுது ஒரு திறமையுள்ள ஆளைத் தேர்ந்தெடுக்க நிரம்ப கஷ்டப்பட வேண்டியுள்ளது. முன்பெல்லாம் சரியான ஆளுக்காக 20 பேர் வரை தேர்ந்தெடுக்காமல் விட்டிருக்கிறேன். இன்றோ கிடைப்பவரை ப்ராஜக்ட்டுக்கு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவும், US வீசா ஏதும் வைத்திருப்பவரானால் திறமையிருக்கோ இல்லையோ, அவரை கவர்ந்துகொள்ள ப்ராஜக்ட்களிடையே கடும் போட்டியிருக்கும்.

90களில் non-computer science படிப்பு படித்தவர்கள் NIIT, Aptech சென்று கணினி பற்றி படித்து வருவார்கள். இப்போது அவ்வாறு படிக்கிறார்களா என்று தெரியவில்லை.

அடிப்படைகளான கான்சப்ட்ஸ்களான டேட்டாபேஸ், ஆப்பரேட்டிங் ஸிஸ்டம், கம்பைலர், நெட்வொர்க்கிங், ஸிஸ்டம்ஸ் ப்ரொக்ராமிங் பற்றி எத்தனை சதவிகிதம் பேர் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பது சந்தேகமே.

நான் இந்தப் பாடங்களை கல்லூரியில் படிக்கும்போது வெறும் தியரியெனெ வெறுத்தாலும், அவற்றின் பயனை ஆன்சைட்டில் ஆறு வருடம் பணியாற்றியபோது அனுபவத்தில் நேரடியாக கண்டுகொண்டேன்.

ஆனால் இன்று அனேகம் பேர் ஜாவா, ஆரக்கிள், .நெட் என சந்தையில் செல்லுபடியாகும் சரக்குகளை மட்டுமே படிக்கின்றனரோ? மேற்சொன்ன அடிப்படை அறிவுதான் நம்மவரை, ஒரு சராசரி வெளிநாட்டு நேட்டிவ் பணியாளரிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது.

இன்றைய நிலைமை தேவை வரத்தைவிட அதிகமாக இருப்பதால் சராசரிகளையும், அதற்கு கீழிருப்பவர்களையும் வேறு வழியின்றி எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

கணினி நிறுவனங்கள் இந்த நிலையை சரி செய்ய தற்காலிக ட்ரெயினிங் கொடுக்கிறார்கள். ஆனால், நான் 4/6 வருடம் படித்ததை மூன்று மாதத்தில் இவர்களின் மூளையில் திணித்துவிட முடியுமா?

இந்நிலைமையை விரைவாக சரி செய்யாவிட்டால் IT துறை கடும் நெருக்கடியை சந்திக்கப் போகின்றது.

MSATHIA said...

சீமாச்சு,
இதுக்கு விரவா கருத்து சொல்லணும். ஏற்கனவே நான் போட்ட பதிவொண்ணு இருக்கு.படிச்சுட்டு உங்க கருத்த சொல்லுங்க ;-)

Anonymous said...

ஆசிரியர்களைச் சொல்லிக் குற்றமில்லை. பாடத் திட்டங்களை வகுப்பவர்களைச் சொல்லலாம். வெளி உலகத் தேவைகளுக்கு ஏற்றவாறு இல்லாமல், அரதப் பழசான புரோக்ரமிங் லாங்குவேஜ்களை வைப்பதைச் சொல்லலாம்.

சீமாச்சு.. said...

//கொஞ்சூண்டு தண்ணியில,பெருசா எதோ சாதிச்சிட்ட மாதிரி இந்த குதி குதிக்கும் நம் முன்னோரும் சில சேதிகளை சிம்பாலிக்கா சொல்றாங்க போல..!(நெறையா சம்பளம் கிடைச்சா ஆட்டம் கூத்து போடாதீங்க,அத தக்க வச்சுக்க என்ன பண்ணுமுனு யோசியுங்க...! - இதானே அதுக்கு அர்த்தம்)
படம் சூப்பர்!

//
ஆயில்யன்.. நம்ம பதிவை ஒரு பின் நவீனத்துவத்துக்குக் கொண்டு போடிட்டீங்க..

ஆமா.. நீங்க மயிலாடுதுறையாமே... உங்க பதிவில் ஆடிப்பெருக்குப் போட்டோவெல்லாம் பார்த்தேனே? மாயவரத்துல எங்க? சியாமளாதேவி கோயில் பேரு சொல்றதைப் பார்த்தால் பெரிய கோவில் சமீபம் மாதிரி தெரியுதே..?

அன்புடன்,
சீமாச்சு

சீமாச்சு.. said...

//ஆசிரியர்களைச் சொல்லிக் குற்றமில்லை. பாடத் திட்டங்களை வகுப்பவர்களைச் சொல்லலாம். வெளி உலகத் தேவைகளுக்கு ஏற்றவாறு இல்லாமல், அரதப் பழசான புரோக்ரமிங் லாங்குவேஜ்களை வைப்பதைச் சொல்லலாம்//

அனானி, ரொம்பச் சரியாச் சொல்லிட்டீங்க.. நான் படிக்கும் போது கூடத்தான் PL/I , IBM System 370 Assembly language,Ada எல்லாம் சொல்லிக் கொடுத்து கடுப்பேத்தினாங்க.. அதெல்லாம் ஒண்ணுக்கும் பிரயோசனமில்லை அப்பவே.. இப்ப சிலபஸ் என்ன இருக்குன்னு தெரியல..

அது சரி.. வாத்தியார்களுக்குத் தெரிஞ்சாத் தானே சொல்லிக் கொடுக்க முடியும்?

நன்றி
சீமாச்சு..

சீமாச்சு.. said...

வவ்வால்,
//பெரும் பாலும் தனியார் கல்லூரிகள் தான் தமிழ் நாட்டில் அவர்கள் குறைந்த சம்பளத்தில் ஆள் பிடிக்க அப்படி எல்லாம் விதி முறைப்பார்க்க முடியாது மேலும் யாரும் தொடர்ந்து அங்கேயே வேலைப்பார்ப்பதில்லை. //
தனியார் கல்லூரிகள் இப்பொழுது எப்படியென்த்ரு எனக்குத் தெரியாது.. நான் படிக்கும் போதெல்லாம் (1981-88) நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக தனியார் கல்லூரிகளிடையே ஒரு ஆரோக்கியமான போட்டியே இருக்கும்.

ஹூ...ம்... அதெல்லாம் அந்தக் காலம்-னு புலம்ப வெச்சிட்டீங்களே !!

அன்புடன்,
சீமாச்சு

சீமாச்சு.. said...

nakkiran,
//Both are right... //

உங்க பின்னூட்டம பார்த்தவுடனேயே.. காரமான பெயரா இருக்கே.. ஏதாவது ஆணித்தரமான கருத்தா சொல்லியிருப்ப்பார்-னு திறந்து பார்த்தா.. இப்படி 'ஆமென்' மட்டும் சொல்லிட்டுப் போயிட்டீங்களே..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
அன்புடன்,
சீமாச்சு...

சீமாச்சு.. said...

ஜீரா,
//
இப்பொழுது இந்தியாவில் இருக்கும் ஐடி துறையினரைப் போன்ற பேராசைக்காரர்களைப் பார்க்க முடியாது. இரண்டு மூன்று வருடங்களிலேயே தங்களைப் பெரிய மென்பொருள் வித்தகராக நினைத்துக் கொள்கின்றார்கள். விதிவிலக்குகள் கண்டிப்பாக உண்டு. ஆனால் பொதுவில் ஆழ உழாமல் அகல உழுது கொண்டிருக்கிறோம்.//

சரியாகச் சொன்னீர்கள்.. கவலைக்குரியதாக இருக்கிறது உங்கள் பதில்..

பதிவெழுதும் போது.. இதெல்லாம் பொய்யா இருக்கக் கூடும்.. பெரும்பான்மை அபிப்ராயங்கள் தாண்டி நல்லதுகளும் அதிகமாக இருக்கும் என்று தான் நினைத்தேன்..


...
உங்கள் பின்னூட்டம் பார்க்கும் வரை..

அன்புடன்,
சீமாச்சு..

சீமாச்சு.. said...

sathia,
//இதுக்கு விரவா கருத்து சொல்லணும். ஏற்கனவே நான் போட்ட பதிவொண்ணு இருக்கு.படிச்சுட்டு உங்க கருத்த சொல்லுங்க //

உங்கள் பதிவு லிங்க் சரியாக் கொடுக்கலை.. உங்கள் பதிவுக்குப் போய்ச் சமீபத்து இடுகையெல்லாம் படித்து விட்டேன்.. நீங்கள் சொல்வது எதுவென்று புரியவில்லை..
ஒருவேளை நான் எல்லாமும் படிக்க வேண்டும் என்பதற்காக சொல்லாமல் விட்டீர்களோ?

அன்புடன்,
சீமாச்சு

Anonymous said...

// இந்த்ப் பிரச்னை கல்லூரிகளிலேயே தொடங்கி விடுகிறது.

I had very good professors and lecturers even though they worked part-time. Barring electronics, we couldn't expect higly experienced teachers in computing - because even some of my professors went to IT jobs. I don't think any project manager is working as a visiting professor anywhere in any university. why not?

// இப்பொழுதெல்லாம் இந்தியாவில் 2 வருடம் .. 3 வருடம் வேலை பார்த்தவனெல்லாம் project lead..

Small to mid level companies have high attrition rate. Almost 50% of the H1 visa holders 'desert' the company. In india also every appraisal cycle there is a high attrition rate. So they have no other way than to promote people to adjust.

Wouldn't you agree?

sriram said...

Dear SSV,
I can clearly understand your "aadangam" and I fully agree to your point. unless we correct the route cause, we will be in trouble soon. as you rightly said, the education is becoming simply a paper which gets you qualifie for a H1B visa (12+4 yrs of education = B.S in US) and then for people from a particular state in India, the life time goal becomes coming to US by Hook or Crook, to top it all, H4 conversions to H1 and make them IT professionals (especially Qualily Analyst) gets Indians a bad name in the US market. All the Indian IT companies like Infosys, TCS, Wipro fighting for the post of biggest body shopping companies and doing only maintenance projects without any active development makes the situation worser. No one has got the time to train their employees before or during the projects.
I really want to add another point here, Its high time we have a subject,exam and grade in spoken English in India, many of the IT professionals in US could not express what they think in proper english.Hope you will agree to my point.
Endrum Anbudan
Sriram