Tuesday, August 14, 2007

52. இவனுங்களைப் பொட்டியோட வூட்டுக்கு அனுப்பணும்

எனது சென்ற பதிவான "51. இந்திய ஐ.டி துறையினரிடம் திறமைக்குறைவா?" என்பது பற்றி சென்னையில் உள்ள என் ஐ.டி நண்பரிடன் தொலை பேசினேன்.

"ராஜா.. இதெல்லாம் ஐடி துறையில மட்டும் இப்ப நடக்குறது இல்ல.....அதுக்கும் மேல....."


நண்பர் ஐ.டி துறையில் வேலை பார்த்தாலும் அவர் மனைவி ஒரு திறமையான மருத்துவர். அதனால் மருத்துவத் துறையில் நடப்பதைப் பற்றி நண்பருக்கு விரிவான் செய்தியறிவு இருக்கும். சமயத்தில் பத்திரிகையில் வராத செய்தியெல்லாம் "குமுதம் ரிப்போர்ட்டர்" பாணியில் சொல்லுவார். இன்று அவர் சொன்ன செய்திகள் 'பகீர்' ரகம்.



1. இவரைப் போல் இன்னொரு நபரும் டாக்டர் மனைவியை வைத்து அறுவை சிகிச்சை கிளினிக் நடத்துகிறார். ஒவ்வொரு அறுவைச் சிகிச்சையின் போதும் மயக்க மருந்து நிபுணருக்கு அதிகம் பணம் தரத் தேவையாய் இருக்கிறதே என்று யோசித்த இந்த நபர், மருத்துவம் படிக்காத இந்த நபர் , யாரிடமோ சென்று 3 நாட்கள் வகுப்பு எடுத்து வந்தாராம். அது முதல் வரும் எல்லா அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கும் இவர் தான் மயக்க மருந்து தருவாராம். இவர் இருப்பது சென்னையில்....
சமீபத்தில் இவர் சிகிச்சையளித்த ஒரு நோயாளி, இவரின் தவறான சிகிச்சையால் (தேவைக்கு அதிகமான மயக்க மருந்தாலோ அல்லது தரப்பட்ட விதத்தாலோ..) நீண்ட கோமாவுக்குச் சென்று விட்டாராம். நோயாளியின் சொந்தங்களும் .. குல தெய்வத்தை கண்டபடி திட்டி விட்டு நோயாளியுடன் வீடு சென்று விட்டனராம்.
2. இன்னொரு செய்தியில் .. நடு இரவு பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு அவரின் மகப்பேறு நிபுணர்.. தூக்கத்தைக் காரணம் காட்டி உதவிக்கு வர மறுத்து விட்டாராம்.. அருகிலிருந்த ஒரு குழந்தைநல மருத்துவர் பிரசவம் பார்க்க வேண்டியாகிவிட்டதாம்..

இவரிடம் கேட்டது போதாதென்று.. இன்றைய செய்தியில் மதுரை சிவா (போ)பாலி கிளினிக் பற்றி செய்தி வேறு.. இந்த செய்தியில் நோயாளி இறந்தே விட்டாராம்.. அதற்கு அந்த டாக்டரின் விளக்கம் அதிர்ச்சியுற்வே செய்தது..
சிவா பாலிகிளினிக் டாக்டர் சிவகுருநாதனை அவரது வீட்டில் சந்தித்தோம். "என் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டுறாங்க" என்றவர், அது பற்றி விளக்கினார்.

"மீனாவின் வயிற்றைக் ஸ்கேன் செய்தபோது கட்டி இருந்தது தெரிய வந்தது. எல்லா டெஸ்ட்டும் செய்து பார்த்த பிறகு, மாலை நான்கு மணியளவில் ஆப்பரேஷன் தொடங்கி நல்ல படியாக முடிந்தது. சீனியர் டாக்டர் அதியமான் என்பவர் ஆப்பரேஷன் செய்தார். ஆப்பரேஷனுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் நன்றாகத்தான் இருந்தார். அதன் பிறகு ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு குறைந்து வியர்க்கத் தொடங்கியது. அரசு ஆஸ்பத்திரிக்குப் போக ஆம்புலன்ஸில் ஏற்றி ஐநூறு ரூபாயும் கொடுத்து அனுப்பினேன். இங்கிருந்து புறப்படும் வரை உயிருடன் தான் இருந்தார். அவர் இறந்ததற்குக் காரணம் தெரியவில்லை..."



இந்த மாதிரி டாக்டர்களையெல்லாம்.. இது மாதிரி மூட்டை கட்டி எங்கயாவது அனுப்பி விட்டு....

அறுவைச் சிகிச்சை முடித்த பின்னரும் உயிரோட இருக்குற பேஷண்ட்டுகளோட சிரிச்சுப் பேசிக்கிட்டிருக்கிற இந்த மாதிரி அழகான டாக்டர்களை நமது நாடு உருவாக்க வேண்டும்...



பி.கு: ச்சின்னதோ பெரியதோ.. அறுவை சிகிச்சை செய்து கொண்ட எந்தவொரு நோயாளியையும் கேட்டுப் பாருங்கள்.. அவங்களுக்கு அவங்க டாக்டர் எவ்வளவு அழகாகத் தெரிகிறார்களென்று.... உயிர் கொடுத்த எல்லா தேவதைகளுமே அழகிகள் தான்.. நம்மை ஈன்ற தாய் உட்பட....


7 comments:

jeevagv said...

:-)
:-)
:-)

ILA (a) இளா said...

//உயிர் கொடுத்த எல்லா தேவதைகளுமே அழகிகள் தான்.. நம்மை ஈன்ற தாய் உட்பட....//

:) Well Said

sriram said...

Neenga vera SSV, 10 Latcham kudutthu seat vangi padichavan kitta vera enna ethir parkka mudium? Manapparai Murugesan case padichinga thane? - 10th padikkum maganai vittu operation pannadhu mattumillamal, padam eduthu record endru sonna doctor ninaichu enga poi muttikkarathunnu therialai.
Endrum Anbudan
Sriram

Nakkiran said...

In first Picture, who is that???

Looks like Tamil cinema Villi...

ha ha ha

சீமாச்சு.. said...

//:) Well Said
//

நன்றி இளா... அழகு என்பது மனதிலிருந்து வருவது.. நாம் பார்க்கும் பார்வையிலும் இருக்கிறது..


அன்புடன்,
சீமாச்சு

சீமாச்சு.. said...

//In first Picture, who is that???

Looks like Tamil cinema Villi...

ha ha ha

//
அன்பு நக்கீரன்,
வாங்க...

தொழில் தெரியாதவனெல்லாம்.. வெளியில போங்கடா.. அப்படீன்னு கோவத்தோட சொல்ற ஒரு அம்மணி போட்டோ தேடிப் பிடிச்சுப் போட்டேன்..

அம்மணி யாருன்னு தெரியாது...

அன்புடன்,
சீமாச்சு.

சீமாச்சு.. said...

//10 Latcham kudutthu seat vangi padichavan kitta vera enna ethir parkka mudium? Manapparai Murugesan case padichinga thane?
//

ஸ்ரீராமூ.. படிச்சேன்.. படிச்சேன்..

வந்த இன்னொரு நபர்.. இதுக்கெல்லாம் "இட ஒதுக்கீடு தான் காரணம்" என்று வேறு சொல்லிட்டுப் போனாரு..

நான் சொல்வதெல்லாம் ஒண்ணுதான்..
"இந்த புனிதமான மருத்துவத் தொழில்ல விளையாடாதீங்கப்பா.. ஒவ்வொரு உயிரும் பல பந்தங்களைக் கொண்டிருக்கு.. உயிரிழப்பினால் ஏற்படும் வடுக்கள் சமயங்களில் ஆறுவதேயில்லை.. புதிய ரணமாக எல்லோர் மனதிலும் இருந்து கொண்டேயிருக்கிறது.."

மருத்துவத் தொழிலில் மனசாட்சியும் குற்ற உணர்வும் மிகப்பெரிய தேவையாகிவிட்டது..

அன்புடன்,
சீமாச்சு